புல்லரிக்கும் வரிகள்... ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியானது 'பொன்னியின் செல்வன் 2' ஆன்தம் பாடல்! வீடியோ...

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சற்று முன்னர் இப்படத்தில் இடம்பெற்ற 'பொன்னியின் செல்வன் 2 ஆன்தம்' பாடல் வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் பார்ட் 1 படத்தை தொடர்ந்து, வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் பார்ட் 2. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் சுமார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில் ஏற்கனவே 'பொன்னியின் செல்வன்2' படத்தில் இருந்து வெளியான, அகநக பாடல் மற்றும் வீரா ராஜ வீரா ஆகிய லிரிகள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில், நல்ல மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இன்று, ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவரே பாடி நடித்துள்ள, 'பொன்னியின் செல்வன் 2' ஆன்தம் பாடல், வெளியாகியுள்ளது. 

ராஜ ராஜ சோழனான அருண் மொழி வர்மனின், வீர தீரம்... போர்... அறிவு கூர்மை உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்கள் குறித்து விவரிக்கும் விதமான இந்த பாடலை, விழா வைத்து 'பொன்னியின் செல்வன் 2' படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளார், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், குந்தவையாக திரிஷாவும், வந்திய தேவனாக கார்த்தியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Video