முதல்ல பாலிவுட்.. இப்போ மோலிவுட்.. SK23 - மலையாளத்தில் இருந்து மாஸ் நடிகரை களமிறக்கும் AR முருகதாஸ்!

Sivakarthikeyan 23 : சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 23வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் முருகதாஸ் இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

First Published Aug 10, 2024, 7:32 PM IST | Last Updated Aug 10, 2024, 7:32 PM IST

தல அஜித் அறிமுகம் செய்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களாக உள்ள வெகு சிலரில் ஒருவர் தான் ஏ.ஆர் முருகதாஸ். கடந்த 2001ம் ஆண்டு தமிழில் வெளியான தல அஜித்தின் "தீனா" திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். தொடர்ச்சியாக தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கடந்த 23 ஆண்டுகளாக மிகச்சிறந்த இயக்குனராக இவர் பணியாற்றி வருகிறார். 

இறுதியாக தமிழில் கடந்த 2020ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தர்பார்" திரைப்படத்தை இயக்கியிருந்த முருகதாஸ், சுமார் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராக தனது பணிகளை துவங்கியுள்ளார். சிவகார்த்திகேயனை வைத்து அவருடைய 23வது திரைப்படத்தை இப்பொது அவர் இயக்கி வருகிறார். 

விறுவிறுப்பாக இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் வித்யுத் ஜமால் இணைந்துள்ள நிலையில், தற்பொழுது பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் SK23 பட பணிகளில் இணைந்துள்ளார்.

Video Top Stories