அம்பேத்கர் பிறந்தநாள்; மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்
Ambedkar Jayanti : அம்பேத்கர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அம்பேத்கரை கொள்கைத் தலைவராக கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அம்பேத்கர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தவெக கட்சியின் தலைவர் விஜய், இன்று காலை சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.