"அதான் துப்பாக்கியை கையில் வாங்கிட்டாரே" SKவுடன் இணைவதை உறுதி செய்த லோகேஷ்! Viral Video!

Amaran Audio Launch : தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் "அமரன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

Share this Video

தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல முன்னணி நட்சத்திரமாக மாறி வருகிறார் சிவகார்த்திகேயன் என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து, அடுத்த தளபதி இவர் தானா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். 

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் "அமரன்" என்கின்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் அவர்களுடைய வாழ்க்கை வரலாறை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. 

வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ஸ்பெஷல் படமாக இது திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு பேசிய பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடன் எப்போது சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படம் இயக்கப் போகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர், "கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் திரைப்படம் குறித்த பேச்சு வார்த்தைகள் தான் இருந்து வருகிறோம். இப்போது தான் துப்பாக்கி அவர் கையில் வாங்கி விட்டாரே, நிச்சயம் சீக்கிரம் அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்" என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Related Video