எக்கச்சக்க குஷியில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள்; வெளியானது புஷ்பா 2 ட்ரைலர் - ஆனாலும் ஒரு குறை!

Pushpa The Rule Trailer : பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

First Published Nov 17, 2024, 7:04 PM IST | Last Updated Nov 17, 2024, 7:04 PM IST

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வெகு சில தெலுங்கு நடிகர்களில் ஒருவர் தான் அல்லு அர்ஜுன். ஏற்கனவே அவருடைய புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா படத்திற்கு பிறகு, சுமார் 3 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு தன்னுடைய அடுத்த படத்தை அல்லு அர்ஜுன் வெளியிட விரைவில் இருக்கிறார். புஷ்பா படத்தின் 2ம் பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது அப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படத்தின் டிரைலர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே வெளியாகி உள்ளதால், தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தோடு காத்திருக்கின்றனர்.

Video Top Stories