Asianet News TamilAsianet News Tamil

Watch : செருப்பை கழட்டி எறிந்து... அம்பானி முன் ராஷ்மிகா உடன் குத்தாட்டம் போட்ட ஆலியா பட் - வைரல் வீடியோ

நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகைகள் ஆலியா பட்டும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடனமாடினர்.

First Published Apr 2, 2023, 1:38 PM IST | Last Updated Apr 2, 2023, 1:38 PM IST

அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான சினிமா பிரபலங்கள் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆலியா பட் இருவரும் இணைந்து குத்தாட்டம் ஆடி உள்ளனர்.

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ராஷ்மிகாவும், ஆலியா பட்டும் இணைந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நடிகை ஆலியா பட் முதலில் காலில் இருந்த செருப்பை மேடையில் இருந்து கழற்றி எறிந்துவிட்டு குத்தாட்டம் போடுவதைப் பார்த்து அம்பானியே வாயடைத்துப் போனார். ராஷ்மிகா, ஆலியாவின் நாட்டு நாட்டு டான்ஸ் தான் தற்போது இணையத்தில் செம்ம டிரெண்டிங் ஆக உள்ளது.

Video Top Stories