துணிஞ்சா வெற்றி நமதே... வெளியானது துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ பாடல் - லிரிக்கல் வீடியோ இதோ

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் கேங்ஸ்டா பாடல் வெளியாகி உள்ளது.

Share this Video

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளன. ரிலீஸில் மட்டுமல்ல அப்டேட் விடுவதிலும் இந்த இரண்டு படங்கள் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், இன்று அதற்கு போட்டியாக துணிவு படத்தின் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கேங்ஸ்டா என தொடங்கும் அப்பாடலை ஷபீர் பாடி உள்ளார். இதுதான் அஜித்துக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ள இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். 

துணிவு திரைப்படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித் உடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பிக்பாஸ் பிரபலங்கள் அமீர், ஜிபி முத்து, பாவனி, மமதி சாரி, சிபி சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video