தட்டிவிட்டா தாறுமாறு... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த துணிவு படத்தின் சில்லா சில்லா வீடியோ சாங் இதோ

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் இடம்பெறும் சில்லா சில்லா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Video

அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகி திரையரங்கில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை அள்ளி மாஸ் காட்டியது. சமீபத்தில் இப்படம் ஓடிடியிலும் வெளியாகி அதிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில், துணிவு படத்தின் வீடியோ பாடல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி அப்படத்தில் அஜித்தின் தாறுமாறான நடனத்துடன் கூடிய சில்லா சில்லா என்கிற வீடியோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடி உள்ளார். இப்பாடலில் இடம்பெறும் அஜித்தின் நடன அசைவுகள் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைத்திருந்தார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண். இப்பாடல் தற்போது யூடியூப்பில் ரிலீசாகி வைரலாகி வருகிறது.

Related Video