OG Sambavam: சும்மா அதிரவிட்ட அஜித்; 'குட் பேட் அக்லி' ஓஜி சம்பவம் லிரிக்கல் பாடல் வெளியானது!
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில், உருவான ஓஜி சம்பவம் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், உருவாகியுள்ள திரைப்படம் தான் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ள இந்த படம், ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தில் இடப்பெற்ற 'OG SAMBAVAM' பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சற்றுமுன் இந்த படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை ஜிவியுடன் இணைந்து ஆதிக் ரவிச்சந்திரனும் பாடியுள்ளார்.