எவன் திமிருக்கும் பவருக்கும் பணியாதே; அனல்பறக்கும் வரிகளுடன் ரிலீஸான விடாமுயற்சி பாடல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் ஹீரோவாக நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான பத்திகிச்சு பாடல் ரிலீஸ் ஆகி உள்ளது.

Share this Video

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நாயகனாக நடித்துள்ள படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி 6ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்காக அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான சாவதீகா பாடல் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான பத்திகிச்சு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை அனிருத் பாடி உள்ளார்.

அனிருத் உடன் சேர்ந்து சூப்பர் சிங்கர் பிரபலம் யோகி சேகரும் இப்பாடலை பாடி இருக்கிறார். இப்பாடல் வரிகளை விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பொளக்கட்டும் பற பற என்கிற பாடலை எழுதி இருந்தார். இதுதவிர நயன்தாரா ஜோடியாக கவின் நடிக்கும் ஹாய் படத்தையும் விஷ்ணு எடவன் தான் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video