Asianet News TamilAsianet News Tamil

தாரை தப்பட்டை கிழிய... வெளியானது அஜித்தின் 'சில்லா சில்லா' பாடல்..!

அஜித்தின் 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியானது.
 

First Published Dec 9, 2022, 6:42 PM IST | Last Updated Dec 9, 2022, 6:42 PM IST

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் - மஞ்சு வாரியார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிவு'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா பாடல் தற்போது வெளியாக அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஜிப்ரன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு... வைஷாக் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.  இந்த பாடலை ஜிப்ரன், அனிரூத், வைஷாக் ஆகியோர் பாடியுள்ளனர். அஜித் ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த பாடலில் இருந்து 10 செகண்ட் பாடல் திருட்டு தனமாக ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இப்படி வெளியாவதை ரசிகர்கள் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என அஜித்தின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

மேலும் ரசிகர்களின் இத்தனை நாள் கார்த்திருப்புக்கு... விருந்து வைக்கும் விதமாக தற்போது 'சில்லா சில்லா' பாடல் செம்ம மாஸ்ஸாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.