Asianet News TamilAsianet News Tamil

நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Dec 31, 2022, 7:25 PM IST | Last Updated Dec 31, 2022, 7:25 PM IST

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் மாஸ் ட்ரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் சற்றுமுன், இந்த பட ட்ரெய்லர் வெளியாகி நல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வங்கிக் கொள்ளகை மையமாக வைத்து 'துணிவு' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தின் டிரைலரும் அதனை உறுதி செய்வது போல் உள்ளது. மேலும் ஒரு வங்கிக்குள் கொள்ளையடிக்க செல்லும் அஜித்... மிகவும் ஜாலியாக என்ஜாய் செய்து எப்படி இந்த கொள்ளையை அடிக்கிறார்? இதற்கான பின்னணி என்ன? என பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தாலும் அவற்றிற்கு படம் வெளியாகும் போது சிறப்பான பதில் இருக்கும் என தெரிகிறது.

குறிப்பாக அஜித்திடம் பிரேம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறீர்களே... வெக்கமா இல்லையா? என கேட்கும் போது, அஜித் தன்னுடைய முகமூடியை கழட்டி விட்டு... சிரித்துக் கொண்டே இல்லை என கூறுவது, ரசிகர்களின் கை தட்டல்களை அள்ளுகிறது. அதை போல் 'என்னை போல ஒரு அயோக்கிய பைய மேல கைய வைக்கலாமா?' என அஜித் பேசும் வசனங்கள் செம மாஸாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  தற்போது வெளியாகி உள்ள இந்த ட்ரைலர் இதோ...

Video Top Stories