Watch : ‘வேணாம்பா, லக்கேஜ் நானே எடுத்துட்டு வாரேன்’ உதவியாளரிடம் பெருந்தன்மையை காட்டிய அஜித்... என்ன மனுஷன்யா!

சென்னை விமான நிலையத்தில் உதவி செய்ய வந்தவரிடம் நடிகர் அஜித் காட்டிய பெருந்தன்மையை அவரது ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Share this Video

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மாதம் உயிரிழந்தார். தந்தையின் மறைவுக்கு பின்னர் வெளியே தலைகாட்டாமல் இருந்து வந்த அஜித், இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் காரில் இருந்து இறங்கியதும் தனது லக்கேஜை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்குள் சென்றார். அவர் லக்கேஜை எடுத்து வருவதை பார்த்த அங்கிருந்த உதவியாளர், அவரிடம் தான் லக்கேஜை எடுத்து வருவதாக கேட்க, அஜித்தோ வேணாம்பா நானே எடுத்துட்டு வரேன் என பெருந்தன்மையுடன் கூறிவிட்டு எடுத்துச்சென்றார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன மனுஷன்யா என அஜித்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.

Related Video