ஒத்த ரூவா தாரேன் பாடலுடன் சும்மா கெத்தா வந்த அஜித்தின் குட் பேட் அக்லீ டிரைலர்!
Good Bad Ugly Tamil Trailer : அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Good Bad Ugly Tamil Trailer : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரபு, யோகி பாபு, அர்ஜூன் தாஸ், சுனில், பிரசன்னா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குட் பேட் அக்லீ. 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. டிரைலரானது ஒத்த ரூவா தாரேன் என்ற பாடல் வரிகளுடன் தொடங்குகிறது.