Asianet News TamilAsianet News Tamil

திருத்தணி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! உருகி உருகி பிரார்த்தனை செய்த வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திடீர் என திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி  போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு சென்று உருக உருக பிரார்த்னை செய்தார்.

பின் அவருக்கு அர்ச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.  திருத்தணி முருகன் கோவில் அறங்காவல் குழு துணை தலைவர் சுரேஷ் உடனிருந்து சாமி தரிசனம் செய்தபிறகு கிளம்பி சென்றார். சூப்பர் ஸ்டாரின் மகள் என்ற அடையாளம் இல்லாமல் தனியாக வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதுகுறித்த வீடியோ இதோ.

Video Top Stories