Lal Salaam: திருவிழா கொண்டாட்டத்தை கண் முன் நிறுத்திய... 'லால் சலாம்' தேர் திருவிழா லிரிக்கல் பாடல்!

'லால் சலாம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'தேர் திருவிழா' லிரிக்கல் பாடல் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சற்று முன்னர் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தேர் திருவிழா' பாடல் வெளியாகியுள்ளது.

ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிக்கல் வரிகள் எழுதி உள்ளார். சங்கர் மகாதேவன், ஏ ஆர் ரைஹானா,யோகி சங்கர் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள தேர் திருவிழா பாடல், ஒரு கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவை கண்முன் நிறுத்தும் விதத்தில் தாத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. செந்தில், தம்பி ராமையா, விஷ்ணு விஷால், உள்ளிட்ட பலர் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளனர். இந்த படத்தில் மகள் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video