Asianet News TamilAsianet News Tamil

ஒத்த காருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பண்ணும் அளப்பறையை பாருங்க... வெளியானது 'சொப்பன சுந்தரி' ட்ரைலர்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'சொப்பன சுந்தரி' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Mar 2, 2023, 6:55 PM IST | Last Updated Mar 2, 2023, 6:55 PM IST

தொடர்ந்து கதையின் நாயகியாக நடிக்கும் படங்களை மட்டுமே அதிகமாக தேர்வு செய்து நடித்து, சத்தமில்லாமல் வளர்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், எஸ்.ஜி.சார்ல்ஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'சொப்பன சுந்தரி. 

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகியுள்ள இந்த படத்தின்... ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒரு காருக்காக ஒரு குடும்பமே எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதை, மிகவும் காமெடியாக கூறியுள்ளார் இயக்குனர். மேலும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் லஷ்மி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்பதற்கு Hamsini Entertainment & Huebox Studios in association நிறுவனம் தயாரித்துள்ளது. 

Video Top Stories