Asianet News TamilAsianet News Tamil

சொதப்பிய செல்போன்... வசமாக சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் பரபரப்பு காட்சிகளுடன் வெளியான 'டிரைவர் ஜமுனா' ஸ்னீக் பீக்!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜமுனா ட்ரைவர்' படத்தில் இருந்து இரண்டாவது ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published Dec 28, 2022, 10:38 PM IST | Last Updated Dec 28, 2022, 10:38 PM IST

தமிழ் சினிமாவில், பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து, சத்தமில்லாமல் வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில், டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'ட்ரைவர் ஜமுனா'. இந்த படத்தில் ஒரு கார் ட்ரைவர் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

இந்த படத்திற்காக அதிவேகமாக கார் ஓட்டியுள்ளது மட்டும் இன்றி டூப் போடாமல் சில சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பரபரப்பான காட்சிகளுடன் இந்த படத்தை இயக்குனர் கிங்சிலி என்பவர் எழுதி இயக்கியுள்ளார். ஜிப்ரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு... கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை எஸ்.பி சவுத்ரி தயாரித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில்  ஆடுகளம் நரேன், மணிகண்டன் ராஜேஷ், கவிதா பாரதி, ஸ்டான்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான ஸ்னீக் பீக் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது ஸ்னீக் பபீக் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.