Agilan Sneak Peek: பக்கா பிளான் போட்டு போலீசை திசை திருப்பும் ஜெயம் ரவி.! 'அகிலன்' பட ஸ்னீக் பீக் வெளியானது..!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், உருவாகியுள்ள 'அகிலன்' படத்தில் இருந்து விறுவிறுப்பான ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், 'பூலோகம்' படத்திற்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம், 'அகிலன்'. கடல் கொள்ளையர்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஜெயம் ரவி கடல் கொள்ளையனாகவும், பிரியா பவானி ஷங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். மார்ச் 10 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், நல்ல வரவேற்பைபெற்றது.

தற்போது இந்த படத்தின், புரோமோஷன் பணிகளில் பரபரப்பாக இயங்கி வரும் படக்குழு. இந்நிலையில் இந்த படத்தில் போலீசாரை திசைதிருப்பி எப்படி, ஜெயம் ரவி கடல் கொள்ளையர்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றி, அனுப்புகிறார் என்பது குறித்த பரபரப்பான ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.

Related Video