மாடர்ன் குந்தவையாக மாறி ஆக்சன் காட்சியில் மிரட்டும் திரிஷா! 'ராங்கி' பட ட்ரைலர் வெளியானது!

நடிகை திரிஷா ஆக்சன் நாயகியாக நடித்துள்ள, 'ராங்கி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

Share this Video

'பொன்னியின் செல்வன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகை திரிஷா நடித்துள்ள 'ராங்கி' திரைப்படம் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை 'எங்கேயும் எப்போதும்' படத்தின் இயக்குனர் சரவணன் இயக்கி உள்ளார். லைக்கா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்திற்காக நடிகை திரிஷா டூப் போடாமல், பல்வேறு அசத்தல் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அசதியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகரான அனஸ்வர ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Related Video