காதலர் விஜயுடன் மோதலா? கல்யாணத்தை தள்ளிப்போடுவது ஏன்? மனம் திறந்த தமன்னா!

Actress Tamannaah Bhatia : பிரபல நடிகை தமன்னா, பாலிவுட் உலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் வர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

Share this Video

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என்று இப்போது நான்கு மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் பிரபல நடிகை தமன்னா. சில வருடங்களுக்கு முன்பு தான் நடித்த ஒரு திரைப்படத்தில் தன்னோடு இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிக்க தொடங்கினார். 

இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கு டேட்டிங் செல்வது, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது போன்ற பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வந்தது. இந்த சூழலில் தான் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை தமன்னா, திருமணத்தைப் பற்றி தற்பொழுது என்னால் யோசிக்க முடியாது என்று கூறியுள்ளது, அவருக்கும் நடிகர் விஜய் வர்மாவுக்கும், இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறதோ என்ற கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல், விஜய் வருமாவுக்கு முன்பாக தான் காதலித்த இரு நபர்கள் குறித்தும் பேசியிருக்கிறார் தமன்னா.

நம் வாழ்க்கையில் அனைவருமே ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தான் வருகிறார்கள், இதற்கு முன்பு நான் காதலித்த இருவருமே நல்லவர்கள் தான், அவர்களுடன் எனக்கு இருந்த உறவு, டாக்சிக் ரிலேஷன்ஷிப் அல்ல, இந்த இரு காதல் தோல்வி தான் என்னை மேம்படுத்தி என்னை கவனமாக செயல்பட வைத்திருக்கிறது என்று பேசி இருக்கிறார். இருப்பினும் விஜய் வர்மாவுடன் தனக்கு பிரேக்கப் ஏற்பட்டு விட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் அவர் கொடுக்கவில்லை.

Related Video