Vanitha : சோனியா கையில் சுருட்டு.. வனிதா கையில் கத்தி.. கம் பேக் கொடுக்கும் நாயகிகள் - தண்டுபாளையம் ட்ரைலர்!

Actress Vanitha and Sonia Agarwal : பிரபல நடிகை சோனியா அகர்வால் மற்றும் நடிகை வனிதா நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள ஒரு படம் தான் தண்டுபாளையம். அந்த படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

First Published May 21, 2024, 4:25 PM IST | Last Updated May 21, 2024, 4:25 PM IST

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் "காதல் கொண்டேன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் சோனியா அகர்வால். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.

தளபதி விஜய், சிம்பு மற்றும் தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும், தற்பொழுது பீல்ட் அவுட்டான நாயகியாகவே சோனியா அகர்வால் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் அவருடைய நடிப்பில் தண்டுபாளையம் என்கின்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை வனிதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. "மரண மாஸ் ரசிகர்களுக்கு மட்டுமே" என்ற டேக் லைனுடன் "தண்டுபாளையம்" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Video Top Stories