வெட்கத்தில் ஆப்பிள் போல சிவந்த சோபிதா.. நிச்சயத்துக்கு சும்மா தேவதை மாதிரி ரெடியாகியிருக்காங்கபா - Viral Video

Actress Sobhita Dhulipala : நடிகை சோபிதா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நாக சைதன்யாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

First Published Aug 11, 2024, 11:04 PM IST | Last Updated Aug 11, 2024, 11:04 PM IST

தமிழில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் மூலம் தனது கோலிவுட் பயணத்தை தொடங்கிய நடிகை தான் சோபிதா துலிபாலா. இவருக்கும் பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்வில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நாகர்ஜூனாவின் மகன் தான் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது. நாக சைதன்யாவிற்கும், பிரபல நடிகை சமந்தாவிற்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணமான நிலையில், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து அந்த ஜோடி விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்பொழுது சமந்தா தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில், நாக சைத்தன்யா தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளார். இந்நிலையில் சோபிதா தனது நிச்சயதார்த்த நிகழ்விற்கு தயாரான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Video Top Stories