மலேசியாவில் அமரன் பட ப்ரோமோஷன்.. ரசிகையோடு அசத்தல் டான்ஸ் போட்ட சாய் பல்லவி - வைரல் வீடியோ!

Sai Pallavi Amaran : பிரபல நடிகை சாய் பல்லவி தனது அமரன் திரைப்பட ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றார்.

Share this Video

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "அமரன்". வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான "ரங்கூன்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற இயக்குனர் தான் ராஜ்குமார் பெரியசாமி. 

மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வரதராஜனின் கதையை தழுவி தான் இந்த அமரன் திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயனும், அவருடைய மனைவி ரெபேக்கா வர்க்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவியும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். 

விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் பட குழு விறுவிறுப்பாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் மலேசியாவில் நடந்த ப்ரமோஷன் பணிகளில், தன்னுடைய திரைப்பட பாடலுக்கு, ரசிகை ஒருவரோடு இணைந்து நடனமாடிய சாய் பல்லவியின் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

Related Video