"அருகே வா கண்மணி".. சுமன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் அசத்தும் "ரகு தாத்தா" - வெளியான லிரிகள் வீடியோ!

Keerthy Suresh : தேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் ரகு தாத்தா.

First Published Jul 21, 2024, 6:17 PM IST | Last Updated Jul 21, 2024, 6:17 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் பிரபல நடிகை மேனகா சுரேஷின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் பிறந்து, வெளிநாட்டில் தனது பட்டப்படிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என்று பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமான நாயகியாக பயணித்து வருகிறார். 

இவர் நடிப்பில் வெளியான "நடிகையர் திலகம்" என்ற திரைப்படத்திற்காக, இவருக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் "ரகு தாத்தா" என்கின்ற திரைப்படத்தில் இப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் ரவிந்தர் விஜய், எம். எஸ் பாஸ்கர், ஆனந்த் சாமி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

சுமன் குமார் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு Sean Roldan இசையமைத்துள்ளார். இந்நிலையில் ரோல்டன் குரலில் ஒலிக்கும் "அருகே வா கண்மணி" என்கின்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்பொழுது வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories