வில்லனாக மிரட்டும் R.K சுரேஷ்.. போராடும் கயல் ஆனந்தி.. ஒரு பக்கா சஸ்பென்ஸ் திரில்லர் - White Rose ட்ரைலர் இதோ!

Actress Kayal Anandhi : பிரபல நடிகை கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் White Rose என்ற படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகியுள்ளது.

First Published Mar 23, 2024, 8:17 PM IST | Last Updated Mar 23, 2024, 8:17 PM IST

தெலுங்கானாவில் பிறந்து கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கிய நடிகை நான் ஆனந்தி. தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான "பொறியாளன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான "கயல்" என்கின்ற திரைப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுத்த நிலையில் இவருடைய பெயர் "கயல் ஆனந்தி" என்று மாறியது.

அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் பெரிய அளவில் நடிக்க துவங்கிய கயல் ஆனந்தி, இந்திய மொழிகள் பலவற்றில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது அவருடைய நடிப்பில் "வைட் ரோஸ்" என்கின்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

பிரபல நடிகர் ஆர்.கே சுரேஷ் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் இந்த திரைப்படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ளது. தற்பொழுது அப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

Video Top Stories