எளிமையாக நடந்த நடிகை ஹரி பிரியா - வசிஷ்டா சிம்ஹாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்! வைரலாகும் வீடியோ..!

பிரபல கன்னட நடிகையான ஹரி பிரியாவிற்கும், கன்னட நடிகர் வசிஷ்டா சிம்ஹாவை திருமண நிச்சயதார்த்தம் நடந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

First Published Dec 9, 2022, 2:47 PM IST | Last Updated Dec 9, 2022, 2:47 PM IST

பிரபல கன்னட நடிகையான ஹரி பிரியா தமிழில்...  நடிகர் கரண் ஹீரோவாக நடித்த, 'கனகவேல் காக்க' என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து அர்ஜுனுக்கு ஜோடியாக வல்லக்கோட்டை, சேரன் மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த முரண் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

30 வயதை கடந்த இவருக்கு எப்போது, திருமணம் செய்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்... கடந்த சில வருடங்களாக தான் டேட்டிங் செய்த, கன்னட நடிகரான வசிஷ்டா சிம்ஹாவை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்த நிலையில்... இவர்களின் நிச்சயதார்த்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் இந்த நட்சத்திர தம்பதிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிச்சயதார்த்த வீடியோ இதோ...