தொழிலதிபராக மாறும் அடுத்த செலிபிரிட்டி.. வீடியோ வெளியிட்டு புதிர் போட்ட பிரியா அட்லீ!

Priya Atlee : பிரபல இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீ விரைவில் ஒரு புதிய தொழில் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதுகுறித்த ஒரு வீடியோவும் அவர் வெளியிட்டுள்ளார்.

Share this Video

தமிழ் திரையுலகை தாண்டி இப்போது பாலிவுட் உலகிலும் டாப் இயக்குனராக வலம் வருபவர் தான் அட்லீ குமார். அண்மையில் பிரபல நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய "ஜவான்" திரைப்படம் உலக அளவில் சுமார் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. அது மட்டுமல்ல, இதுவரை பிளாப் படங்களை கொடுக்காத இயக்குனர்களின் பட்டியல் முன்னிலையில் இருக்கிறார் அட்லீ. 

அட்லீயின் மனைவி பிரியா அட்லீயும் ஒரு நடிகை தான், அதுமட்டுமல்லாமல், அட்லீயின் A for Apple என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருவதும் அவர் தான். ஏற்கனவே அந்தகாரம் என்ற படத்தை தயாரித்துள்ள பிரியா அட்லீ, இப்பொது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் உலகில் களமிறங்கியுள்ள பேபி ஜான் படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், தங்களது புதிய நிறுவனம் குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரியா அட்லீ. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தங்களுடைய புது நிறுவனம் குறித்த அந்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கு முன்னதாக இந்த வீடியோவை வைத்து தனது ரசிகர்களை, வரப்போவது என்ன என்பது குறித்து யூகிக்க முடிகிறதா என்றும் கேட்டுள்ளார்.

Related Video