கடைசி நேரத்தில் ஓடி வந்த விமல்; கதறி அழுத மாரிமுத்துவின் மகன்

மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் விமல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Share this Video

திரைப்பட இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று சென்னையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலானது சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலை தேதி கிராமத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பட நடிகர் விமல் நேரில் வந்து மாலை அணிவித்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி தனது இரங்கலை தெரிவித்தார். கடந்த 2014ம் ஆண்டு உயிரிழந்த மாரிமுத்து நடிகர் விமலை கதாநாயகனாக வைத்து புலிவால் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனியார் தொலைக்காட்சியில் வருகிற நாடகத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததால் பல்வேறு பகுதியில் இருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

Related Video