வீர தீர சூரன் படம் காண சத்யம் தியேட்டருக்கு வந்த நடிகர் விக்ரம்! அலைபோல் சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம் !
விக்ரம் நடிப்பில், இயக்குனர் எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில், HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் தான் 'வீர தீர சூரன் 2'. விக்ரமுடன் இணைந்து, எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆன வீர தீர சூரன் திரைப்படம் . இந்நிலையில் 'வீர தீர சூரன் படம் காண சத்யம் தியேட்டருக்கு வந்த நடிகர் விக்ரம் . அலைபோல் சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம் ...பிறகு ரசிகர்கள் கூட்டத்தால் ஆட்டோவில் ஏறி சென்றார் நடிகர் விக்ரம் !