கேட்ட உடனே 1 லட்சம் போட்டு விட்டார் விஜய் சேதுபதி... வடிவேலு பேசுனதும் பாதி குணமாகிட்டேன்- போண்டா மணி உருக்கம்

சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாக நடிகர் போண்டா மணி தெரிவித்ததை அடுத்து, அவருக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

First Published Sep 23, 2022, 3:08 PM IST | Last Updated Sep 23, 2022, 3:08 PM IST

நகைச்சுவை நடிகர் போண்டாமணி சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபாத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் எனவும் நடிகர் பெஞ்சமின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அவரின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என உறுதியளித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படியுங்கள்... அமைச்சரை தொடர்ந்து காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய பார்த்திபன்..

இதேபோல் திரையுலக நடிகர்கள் பலரும் தற்போது போண்டா மணிக்கு உதவ முன்வந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் பார்த்திபன் தற்போது அவருடைய மருத்துவ செலவை தான் பார்த்து வருவதாக கூறினார். அதேபோல் நடிகர் வடிவேலுவும் தன்னால் இயன்ற உதவியை செய்வேன் என இன்று காலை அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தான் கேட்ட உடனேயே ரூ.1 லட்சம் போட்டு விட்டதாக நடிகர் போண்டா மணி தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு உதவி செய்ய உள்ளதாக வடிவேலு பேசியதைக் கேட்டு தான் பாதி குணமடைந்துவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவில் பேசி உள்ளார் போண்டா மணி. 

இதையும் படியுங்கள்... போண்டா மணியின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் : சுகாதாரத்துறை அமைச்சர்

Video Top Stories