Vijay Antony : "வார்னிங் கொடுக்கும் சரத்.. கேட்க மறுக்கும் விஜய் ஆண்டனி" - "மழை பிடிக்காத மனிதன்" ட்ரைலர் இதோ!

Mazhai Pidikkathan Manithan : பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் தான் "மழை பிடிக்காத மனிதன்". அந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

தமிழில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான "காத்திருந்த கண்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுள்ளையில் களமிறங்கிவர் தான் விஜய் மில்டன். "ஆட்டோகிராப்", "காதல்", மற்றும் "காதலில் விழுந்தேன்" போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அவர். 

கடந்த 2006ம் ஆண்டு வெளியான "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கினார். ஏற்கனவே ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ள விஜய் மில்டன் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் விஜய் ஆண்டனியின் இந்த "மழை பிடிக்காத மனிதன்". 

இந்த திரைப்படத்தில் மூத்த தமிழ் திரையுலக நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் மூத்த நடிகை சரண்யா பொன்வண்ணன், மற்றும் நடிகை மேகா ஆகாஷ் ஆகியோரும் நடுத்துள்ளனர். இப்பொது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிக அளவில் திரைப்படங்களை வெளியிட்டு, அதை ஹிட் படங்களாக மாற்றி வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் ஏற்கனவே இவ்வாண்டு "ரோமியோ" திரைப்படம் வெளியாகிய நிலையில், விரைவில் "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படம் வெளியாக உள்ளது.

Related Video