Anjaamai : "நம்மகிட்ட இருக்க ஒரே ஆயுதம் கல்வி" இது நீட் எதிர்ப்பு படமா? சர்ச்சையோடு வெளியான "அஞ்சாமை" Trailer!
Anjaamai Trailer : இயக்குனர் சுப்புராமன் இயக்கத்தில் பிரபல நடிகர் விதார்த் மற்றும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் தான் அஞ்சாமை.
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, பிரபு சாலமனின் "மைனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை ஹீரோவாக துவங்கியவர் தான் விதார்த். இவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள விதார்த் நடிப்பில் தற்போது அஞ்சாமை என்கின்ற திரைப்படம் உருவாகியுள்ளது. நீட் தேர்வினால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த திரைப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது, தற்பொழுது வெளியான அஞ்சாமை திரைப்படத்தின் டிரைலர் மூலம் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ரகுமான் நடித்திருக்கிறார். விதார்தின் நாயகியாக மற்றும் இரு குழந்தைகளின் தாயாக மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் வாணி போஜன். எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகிகிறது. தற்பொழுது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்திய அதை நேரம் பல சர்ச்சைகளையும் எழுப்பி உள்ளது என்றே கூறலாம்.