நம்ம ஸ்டோரிலே நோ காதல்.. திருட்டு மட்டும் தான்.. வைபவின் Chennai City Gangsters - டீசர் இதோ!

Vaibhav : ரணம் அறம் தவறேல் திரைப்படத்தை தொடர்ந்து, பிரபல நடிகர் வைபவ் தனது அடுத்த திரைப்பட அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

Share this Video

தெலுங்கு திரை உலகில் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் கோதண்டராமணி ரெட்டியின் மகன் தான் பிரபல நடிகர் வைபவ். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். 

தமிழில் 2008ம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான "சரோஜா" என்கின்ற திரைப்படம் தான் இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம். தொடர்ச்சியாக "கோவா", "மங்காத்தா", "பிரியாணி", "ஆம்பள", மற்றும் "அரண்மனை 2" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார் வைபவ். 

இறுதியாக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான "ரணம் அறம் தவறேல்" என்கின்ற திரைப்படத்தில் வைபவ் நடித்திருந்தார். அது அவருடைய 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேசவ் ஆகிய இருவருடைய எழுத்து மற்றும் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் இமான் இசையில், "சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார். இப்பொது படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video