படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் சூர்யா விரைவில் குணமடைய ரசிகர்கள் சிறப்பு பூஜை

கங்குவா படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் சூர்யா பூரண உடல் நலம் பெற வேண்டி மயிலாடுதுறை மாவட்ட சூர்யா ரசிகர்கள் சார்பில் பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

First Published Nov 24, 2023, 3:46 PM IST | Last Updated Nov 24, 2023, 3:46 PM IST

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்தது. இதில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பினார். மேலும் காயமடைந்த சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் நடிகர் சூர்யா பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

மயிலாடுதுறையில் உள்ள பிரசன்னா மாரியம்மன் ஆலயத்தில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் விரைவில் குணமடைய வேண்டுமென வழிபட்டனர். மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் சூர்யா ரசிகர்கள் பங்கேற்று நடிகர் சூர்யாவிற்காக வழிபாடு மேற்கொண்டனர்.

Video Top Stories