Watch : மும்பையில் ராஜு பாய்... நியூ லுக்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் லேட்டஸ்ட் வீடியோ இதோ
நடிகர் சூர்யா மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வந்த போது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா அண்மையில் தனது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் குடியேறினார். இந்நிலையில், தற்போது மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் வந்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அப்போது வீடியோ எடுத்தவர்களிடம், தான் குழந்தைகளுடன் வந்திருப்பதாகவும், தயவு செய்து வீடியோ எடுக்காதீர்கள் என அன்பாக வந்து வேண்டுகோள் விடுத்து சென்றுள்ளார்.
நடிகர் சூர்யா தனது குழந்தைகளை மீடியா வெளிச்சத்திற்கு கொண்டுவருவதை ஒருபோதும் விரும்பியதில்லை. இதற்கு முன் ஏர்போர்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 42 திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்திற்காக நடிகர் சூர்யா வித்தியாசமான லுக்கிற்கு மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.