லோகேஷ் கண்டிப்பா அதை செய்யமாட்டார்; Rolex திரைப்படம் பற்றிய கேள்வி - மனம் திறந்த சூர்யா!

Actor Suriya : ரசிகர் ஒருவர் சூர்யா நடித்த Rolex கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, ஓப்பனாக அதற்கு பதில் கூறியுள்ளார்.

Ansgar R  | Published: Nov 5, 2024, 11:54 PM IST

வருகின்ற நவம்பர் 14ம் தேதி உலக அளவில் சுமார் 38 மொழிகளில் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் சூறாவளியின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரமோஷன் பணிகளில் சூர்யா ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று கேரளாவில் நடந்த கங்குவா திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் அவர் பங்கேற்றார். 

அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய ரோலக்ஸ் கதாபாத்திரம் தனியாக ஒரு கதையாக உருவாக இருக்கிறது. ஆனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு வில்லனாக காட்டாமல், அந்த கதாபாத்திரத்தின் நல்ல பகுதியை லோகேஷ் படமாக எடுப்பாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதை கேட்டு சிரித்துக்கொண்டே பதில் அளித்த சூர்யா, "நிச்சயம் அப்படி ஒரு விஷயத்தை லோகேஷ் கனகராஜ் செய்யமாட்டார். காரணம் ரோலக்ஸ் என்றாலே கெட்டவன் தான். ஆகையால் அந்த கதாபாத்திரத்தின் நல்ல பகுதி எடுக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்றார் அவர்.   

Read More...

Video Top Stories