"மன்னிப்பு"; சூர்யாவின் கங்குவா திரைப்படம் - வெளியான சிறப்பான அடுத்த அப்டேட் இதோ!

Kanguva Update : பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படம் தான் "கங்குவா". வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

Ansgar R  | Published: Nov 6, 2024, 11:53 PM IST

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது "கங்குவா" என்றால் அது மிகையல்ல. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் இது. உலக அளவில் சுமார் 38 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகின்றது என்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.  

வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்காக விறுவிறுப்பான பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர். நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பட்டாணி, பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். இந்த நிலையில் நாளை மாலை 6:00 மணிக்கு கங்குவா திரைப்படத்திலிருந்து "மன்னிப்பு" என்கின்ற மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்த சூழலில் அதன் முன்னோட்டம் இப்போது வெளியாகி உள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பல ஆண்டுகளாக பெற்று வரும் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் கங்குவா படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

Video Top Stories