அப்போ அந்த வில்லன் கார்த்தி தானா? மிரட்டலாக வெளியான கங்குவா படத்தின் ரிலீஸ் ட்ரைலர்!

Kanguva Trailer : பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது. அந்த திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.

Share this Video

முதல் முறையாக பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் பிரபல நடிகர் சூர்யா. இந்த திரைப்படத்தை பிரபல ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் நிலையில் சுமார் 38 மொழிகளில் உலக அளவில் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்களை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்திருக்கிறார். இந்த சூழலில் பலரும் எதிர்பார்த்த அந்த திரைப்படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ட்ரைலரின் இறுதியில் ஒரு நடிகரின் முகம் காட்டப்படுகிறது, பார்ப்பதற்கு கொஞ்சம் கார்த்தி போல இருப்பதால் இந்த படத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

Related Video