"ரஜினிகாந்த்.. தமிழ் சினிமாவின் அடையாளம்" - மனம் திறந்த நடிகர் சூர்யா - வைரலாகும் வீடியோ!

Suriya About Rajinikanth : கார்த்தியின் மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார் நடிகர் சூர்யா.

Share this Video

நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், இப்போது அந்த திரைப்படம் குறிப்பிட்ட அந்த தேதியில் இருந்து ஒத்திவைக்கப்படுவதாக அண்மையில் பட குழு அறிவித்தது. இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், ஏன் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவில்லை என்பது குறித்த விளக்கத்தை அளித்திருக்கிறார் சூர்யா. 

இப்போது நடிகர் கார்த்தியின் "மெய்யழகன்" திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், நேற்று அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்று பட குழுவினரை வாழ்த்திய சூர்யா, இறுதியாக "கங்குவா" திரைப்படம் குறித்து பேச ஆரம்பித்தார். சுமார் 2.5 ஆண்டு காலம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களின் கடின உழைப்பால் உருவான ஒரு குழந்தை தான் "கங்குவா". அதனுடைய பிறந்த நாளை நாம் அனைவரும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவது உறுதி. 

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாம் குழந்தையாக இருந்தபொழுதே இந்த தமிழ்த்துறை உலகின் அடையாளமாக விளங்கி வருகிறார். ஆகையால் அவருடைய திரைப்படத்தோடு நமது திரைப்படம் வெளியாவது ஏற்புடையதாக இருக்காது. ஆகவே அக்டோபர் 10ம் தேதி அந்த படம் வெளியாகாத நிலையில், விரைவில் மறுதேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார் சூர்யா. 

Related Video