தேசிய விருது வாங்க குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் சூர்யா - வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ
மகன் தேவ், மகள் தியா மற்றும் மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா விமான நிலையம் வந்த போது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. நடிகர் சூர்யா பெற உள்ள முதல் தேசிய விருது இது என்பதால், அவர் விருது வாங்குவதை பார்க்க அவரது குடும்பத்தினரும் உடன் சென்றுள்ளனர். மகன் தேவ், மகள் தியா மற்றும் மனைவி ஜோதிகாவுடன் நடிகர் சூர்யா விமான நிலையம் வந்த போது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா ஆகியோரும் இன்று மாலை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய விருதை வாங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.