Watch: இந்த மனசு தான் சார் கடவுள்! ரசிகனின் அம்மா உடல்நிலையை விசாரிக்க ஆட்டோவில் வீட்டுக்கே விசிட் அடித்த சூரி

விடுதலை நாயகன் சூரி அவர்கள்  மதுரையில் தனது ரசிகரின் இல்லத்திற்கு எளிமையான முறையில் ஆட்டோவில் சென்று தனது ரசிகனின் தாயாரை சந்தித்து அவர்களின் உடல் நலன் பற்றி விசாரித்து கேட்டு அறிந்தார்.
 

Share this Video


தமிழ் சினிமாவில், காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளனர் சூரி. இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த 'விடுதலை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து 'கொட்டு காளி' என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். அதே போல் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து, ஹீரோ சப்ஜெட் படங்களையே சூரி தேர்வு செய்து நடித்து வருவதால், பலர் முழு நேர ஹீரோவாக மாறிவிட்டாரா? என்கிற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.

மேலும் சூரியின் காமெடிக்கு இருக்கும் ரசிகர்களை விட... ஹீரோவாக கொண்டாடவும் தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி விட்டது. இந்நிலையில், சூரி... மதுரையில் உள்ள தன்னுடைய ரசிகரின் தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை என்பதை அறிந்து, அவரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்று நலம் விசாரித்துள்ளார். இது குறித்த, வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Related Video