Soori Garudan : வெறியாட்டம் ஆடவிருக்கும் சூரி.. வெளியான கருடன் பட பாடலின் லிரிகள் வீடியோ - மரண மாஸ் சாங் இதோ!

Garudan Movie Song : பிரபல நடிகர் சூரி, முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் புதிய திரைப்படமான கருடன் படத்திலிருந்து ஒரு பாடலின் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.

First Published May 24, 2024, 11:07 PM IST | Last Updated May 24, 2024, 11:07 PM IST

இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இயக்குனர் துரை செந்தில்குமார் அறிமுக இயக்குனராக களம் இறங்கும் திரைப்படம் தான் கருடன். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

மேலும் கதையின் நாயகனாக நடிக்கின்றார் பிரபல நடிகர் சூரி, வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் கொடுத்த வரவேற்பு, தற்பொழுது நடிகர் சூரிக்கு தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்களை பெற்று தருகிறது என்றால் அது மிகையல்ல. யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே கருடன் திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 

இப்பொது கருடன் படத்திலிருந்த்து "ஒத்தப்பட வெறியாட்டம்" என்கின்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. சூரியின் ரசிகர்கள் இந்த பாடலை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர் என்றே கூறலாம்.

Video Top Stories