Asianet News TamilAsianet News Tamil

என்னை நடிகவேலுடன் ஒப்பிட்ட தலைவர்! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றி விழாவில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நேற்று கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
 

First Published Nov 17, 2023, 8:40 PM IST | Last Updated Nov 17, 2023, 8:40 PM IST

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ் ஜே சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளதாகவும், குறிப்பாக இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை குறிஞ்சி மலர் என குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளது தங்கள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்ப்பதாக தெரிவித்தார்.

குறிஞ்சி மலர் என்கிற வார்த்தை மிகவும் அறிய வார்த்தை. அதை போல் தங்களுடைய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் மிகவும் அரிய கிரியேட்டராகவே உள்ளார். அவருடைய கேரியரில் மிகப்பெரிய பெஸ்ட் ஆகவே இப்படம் உள்ளதாக தான் கருதுவதாக எஸ் ஜே சூர்யா தெரிவித்தார். மேலும் இப்படத்தைப் பற்றி அவர் தன்னிடமும் ராகவா லாரன்ஸ் இடமும், இது தன்னுடைய கெரியரில் மிகவும் சிறந்த படம் என்பதை பகிர்ந்து கொண்டதாகவும், அதேபோல் தன்னுடை அதேபோல் நான் ஒரு நடிகனாக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன் அதனை நிறைவேற்றியது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படம் என தன்னுடைய பழைய படத்தின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்தில் தன்னுடன் ஸ்கிரீன் ஸ்பேஸை பகிர்ந்து கொண்ட ராகவா லாரன்ஸ்க்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் ரசிப்பு திறன் உயர்ந்திருப்பதாகவே தான் பார்ப்பதாகவும், ரஜினிகாந்த் தன்னை நடிகவேல் ஐயாவுடன் ஒப்பிட்டு பேசியது இந்த பிறவி பலனை அடைந்ததாக உணர்வதாக கூறியுள்ளார்.
 

Video Top Stories