விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Share this Video

மறைந்த தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாத பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கும், கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கும் நேரில் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது மனைவியுடன் சாலிகிராமத்தில் அமைந்துள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

Related Video