உறவினர்கள் புடைசூழ 70 வயதில் திருமணம் செய்துகொண்ட நடிகர் செந்தில்

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70 ஆவது வயதே பூர்த்தி செய்ததை முன்னிட்டு, திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் பீமரத சாந்தி பூஜை செய்து வழிபாடு.

Share this Video

தமிழ் சினிமாவில், வடிவேலு, விவேக், சூரி, யோகிபாபு, சந்தானம் என எத்தனையோ காமெடி நடிகர்கள், கலக்கி வந்தாலும், அன்று முதல் இன்று வரை கவுண்டமணி - செந்தில் காமெடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் நடிகர் செந்திலின் 70வது வயது‌ பூர்த்தி அடைந்ததைத் தொடர்ந்து உலக புகழ்பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் மனைவி, மகன்கள், மருமகள்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர் நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டது.

Related Video