ரஜினியே வியந்து பாராட்டிய படம்; வாய்ப்பை தவறவிட்டு வருந்தும் ஆர்.ஜே. பாலாஜி!

RJ Balaji : தன்னுடைய திரை வாழ்க்கையிலேயே "அந்த" ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும், அதில் நடிக்காமல் போனதிற்காக வருந்தியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.

Ansgar R  | Published: Nov 22, 2024, 11:19 PM IST

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தான் "சொர்க்கவாசல்". விரைவில் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "அயோத்தி" படம் குறித்து அவர் பேசியுள்ளார். "அயோத்தி" படத்தில் நடிக்க முதலில் தன்னை தான் இயக்குனர் அணுகியதாகவும். ஆனால் அப்போது அந்த படத்தில் தன்னால் நடிக்கமுடியாமல் போனதாகவும் கூறியுள்ளார். உண்மையில் அதை நினைத்து தான் இப்பொது வரை வருத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அயோத்தி படம் பார்த்த ரஜினிகாந்த், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Read More...

Video Top Stories