ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் படுத்து உருண்ட ரஜினி ரசிகர்

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவிலில் நடிகர் ரஜினியின் ரசிகர் அங்க பிரதட்சணம் செய்தார்.

Share this Video

இயக்குநர் நெல்சன் திலீப் இயக்கத்தில், அனிருத் இசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோவிலில் ரஜினி ரசிகர் கோல்டன் சரவணன் என்பவர் அங்கப்பிரதட்சணம் செய்து, தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மண் சோறு உண்டனர். மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினர்.

Related Video