சும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! வீடியோ

சும்மா கிழிகிழினு கிழித்த சினிமா ரசிகர்கள்.. ஐயப்ப சுவாமி பாடல் காப்பி 'தர்பார்' பாடல்..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! வீடியோ

First Published Nov 28, 2019, 1:05 PM IST | Last Updated Nov 28, 2019, 1:05 PM IST

'பேட்ட' படத்திற்குப் பின், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடி காவல் அதிகாரியாக நடித்துள்ள 'தர்பார்' படத்தில் இருந்து நேற்று மாலை வெளியானது. ரஜினியின் வசனத்துடன் தொடங்கும் சும்மாகிழி என்ற இந்த பாடல்,ரஜினியின் ஆஸ்தான தொடக்க பாடல்களை பாடும் எஸ்.பி.பி சும்மா கிழி என உரத்த குரலில் ஒலிக்கிறது. 

வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்த இப்பாடல் தற்போது வரை பல லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். வெளியானது முதல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் இப்பாடலுக்கும் இதன் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

எஸ்.பி.பி பாடியிருக்கும் ‘சும்மா கிழி’ பாடலும் பிரபல ஆன்மிக பாடகர் ஸ்ரீ ஹரி பாடியிருக்கும்  ‘கட்டோட கட்டும்புடி பள்ளிக்கட்ட சொமந்தபடி’ என்ற ஐயப்பன் பாடலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கதை திருட்டு சர்ச்சை தமிழ் திரையுலகில் மிக பெரும் விவகாரமாக இருந்து வரும் நிலையில் தற்போது ஐயப்ப சுவாமி பாடல் ஒன்றின் காப்பி என்று சமூக வலைதளங்களில் சினிமா இசை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

Video Top Stories