ரெண்டு பேருமே என் தம்பிகள் தான்... வாரிசு, துணிவு மோதல் குறித்து நடிகர் பிரபு அளித்த பளீச் பதில்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு வாரிசு, துணிவு படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவது குறித்து பேசி உள்ளார்.

First Published Jan 8, 2023, 3:14 PM IST | Last Updated Jan 8, 2023, 3:14 PM IST

கொம்பன், மருது, விருமன் போன்ற படங்களை இயக்கிய முத்தையா அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம். ஆர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு, இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்திருந்தார்.

அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபு, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. அதில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். அவருடன் சேர்ந்து நானும் கூட நடிக்கிறேன் என தெரிவித்தார். 

அப்போது வாரிசு, துணிவு படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரபு, வாரிசு, துணிவு ரெண்டு படங்களும் வரட்டும், நன்றாக போகட்டும். ரெண்டு பேருமே நம்ம தம்பிகள் தானே என சிரித்தபடி கூறிவிட்டு சென்றார். இதில் விஜய்யின் வாரிசு படத்தில் பிரபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories